முக்கொம்பில் நீர்வரத்து அதிகரிப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

0 225
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், முக்கொம்பு காவிரியில் நீர்வரத்து அதிகரித்து , காவிரி மற்றும் கொள்ளிடத்தில் நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர்.க.மணிவாசன், இ.ஆ.ப., அவர்கள் இன்று ( 31.8.22) ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. அபிராமி, நீர் வளத்துறை செயற்பொறியாளர்கள் ஆர்.தமிழ்செல்வன், ஏ‌. நித்தியானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.