லடாக்கில் பணியில் இருந்த லால்குடியை சேர்ந்த ராணுவ வீரர் சாவு

0 390
Stalin trichy visit

லால்குடி அருகே நெய்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் ரெமி ஜூலியன் (வயது 43), ராணுவ வீரரான இவருக்கு திருமணமாகி ஜான்சிராணி என்ற மனைவியும், ஜெனித் ஜோயல் (9) என்ற மகனும் உள்ளனர். கடந்த 1999-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த ரெமி ஜூலியன் தற்போது என்ஜினீயரிங் ரெஜிமெண்ட் யூனிட்டில் ஹவால்தாராக பணியில் இருந்தார். இந்நிலையில், வழக்கம்போல் லே லடாக்கில் பணியில் இருந்த போது, உடல்நலக்குறைவு ஏற்பட்டு ரணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 19-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ரெமி ஜூலியன் குடும்பத்தினருக்கு ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, அவரது உடல் லே லடாக்கில் இருந்து இன்று (புதன்கிழமை) விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்படுகிறது. பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் நெய்குப்பையில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) ராணுவ மரியாதையுடன் ரெமி ஜூலியன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.