தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
திருச்சி, மே 14 திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம், கூத்தூர் விக்னேஷ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் இன்று (14.05.2024) நடைபெற்று வரும் தனியார் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி , இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.குமார், போக்குவரத்து வாகன ஆய்வாளர்கள், தனியார் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.