நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, மே 18 திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், அய்யம்பாளையம் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.