வயல்களை நேரில் பார்வையிட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு
திருச்சி, ஜூலை 17 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மும்முடி சோழமங்கலம் கிராமத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சாந்தாமணி குறுவை நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வயல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது நெல் வயலில் பாசி காணப்பட்டதால், அதனைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 2 கிலோ காப்பர் சல்பேட் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு பரிந்துரை செய்து தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி சத்தியப்பிரியா, உதவி வேளாண்மை அலுவலர் சந்திரசேகர், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர், சபரிச்செல்வன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.