மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி : அமைதிப் பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் ஏற்பு
திருச்சி, ஜூலை 17 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி அமைதிப் பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், பெட்டவாய்த்தலை பகுதியில் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 14.07.2026 அன்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் எதிரொலியாக, 16.07.2026 இன்று ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
போராட்டக் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, எழுத்துப்பூர்வமான உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெட்டவாய்த்தலை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தி, நடுவே தடுப்புச் சுவர் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெட்டவாய்த்தலை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேர மருத்துவ சேவையை வழங்கும் வகையில் மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதுடன், வரும் திங்கட்கிழமை முதல் மூன்று சுற்று முறையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருந்து 24 மணி நேர சிகிச்சை சேவை வழங்கப்படும் என்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.
மேலும், கட்டி முடிக்கப்பட்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருந்த பொதுக் கழிவறைகள் ஒரு வாரத்திற்குள் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த உறுதிமொழிகள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தது.
அமைதிப் பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் லெனின், ஒன்றிய செயலாளர் தோழர் கருணாநிதி, ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் ரவிச்சந்திரன், கிளைச் செயலாளர் தோழர் ரங்கநாதன் மற்றும் நிர்வாகிகள் தங்கதுரை, ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.