பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கையுந்துபந்து போட்டி

0 258
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கையுந்துபந்துக் கழகம் (VolleyBall Association) பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கையுந்துபந்து போட்டியினை 27.08.2022 மற்றும் 28.08.2022 ஆகிய இரு நாட்களில் செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடத்தியது. ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் பிரிவில் அமலா மேல்நிலைப்பள்ளி, முசிறி அணியினர் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலாயா, கூத்தூர் அணியை வீழ்த்தி (25-11, 25-13) முதலிடம் பிடித்தனர். ஆண்கள் பிரிவில் காஜாமியான் மேல்நிலைப்பள்ளி திருச்சி அணியினர், S.M.மேல்நிலைப்பள்ளி உறையூர் அணியை வீழ்த்தி (25-22, 25-18) முதலிடம் பிடித்தனர்.

28.08.2022 இரண்டாம் நாள் காலை போட்டியினை மாண்புமிகு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  தொடங்கி வைத்தார்.

அன்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் Dr.தங்க பிச்சையப்பா, தலைவர், திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகம்  தலைமை தாங்கினார். S.கோவிந்தராஜன், செயலாளர், திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகம் அவர்கள் வரவேற்றார்கள். சிறப்பு விருந்தினர்களாக திரு.M.ஆனந்தன், கமாடண்ட், தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் 1 பட்டாலியன், திருச்சி அவர்களும் திருச்சி வடக்கு மாநகர சட்டம் ஒழுங்கு இணை கண்காணிப்பாளர் அன்பு  கலந்து கொண்டு வெற்றிப் பெற்றவர்களுக்கு கோப்பை, பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள். மேலும் இவ்விழாவில் விருந்தினர்களாக திரு.மனோகரன், M.D. பனானா லீப் ரெஸ்டாரெண்ட்ஸ் , RSM அருள்ராஜ், MD, AJ, Trichy Properties திரு.கலீல் ரகுமான், தலைமை ஆசிரியர், காஜாமியான் மேல்நிலைப்பள்ளி R.S.தமிழ்ச்செல்வன், புரவலர் திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகம், மேலூர் குணா, புரவலர், திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகம் மற்றும் திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். K.சிவாஜி, பொருளாளர் திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகம் அவர்கள் நன்றி கூறினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.