மண்டல தலைவர் மதிவாணன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
தமிழக அரசின் சார்பாக குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ரூ. 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் சுந்தர்ராஜ்நகர், மற்றும் அரியமங்கலம் கலைவாணர் தெரு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன நியாய விலைக்கடையில் திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மண்டலம் மூன்றின் தலைவர்
மு. மதிவாணன் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு வேட்டி சேலைகள் மற்றும்
ரூ.1000 உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் திமுக பகுதி கழக செயலாளர்கள் தர்மராஜ்
ஜெயக்குமார் மற்றும் வட்டக்கழக செயலாளர்கள் மாரிமுத்து தங்கவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.