தி.மு.க. அரசைக் கண்டித்து அதிமுகவினர் துண்டு பிரசுரம் வழங்கல்

0 216
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 17  திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதி மற்றும் திருவானைக்காவல் பகுதி கழகத்தின் சார்பில் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா வளைவு முதல் தேவி தியேட்டர் வரை   திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில், அதிமுகவினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பேருந்து பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களிடம் விடியா திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.

இதில், அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, மனோகரன், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பொன்.செல்வராஜ், ஸ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர் சுந்தர்ராஜ், திருவானைக்காவல் பகுதி கழக செயலாளர் திருப்பதி, வட்டக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.