தொட்டியத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தி.மு.க. கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, டிச.24 தொட்டியத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் .
திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், முசிறி தொகுதி எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஒன்றிய பாஜக அரசு 100 நாள் வேலைத் திட்டத்தைச் சிதைக்கும் வகையில் கொண்டு வந்துள்ள புதிய சட்ட மசோதாவைக் கண்டித்தும், அதற்குத் துணைபோகும் அதிமுகவைக் கண்டித்தும், திருச்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று பிரம்மாண்ட கண்டன முழக்கங்கள் எழுப்பினர்..
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் வாணபட்டரை மைதானத்தில் ஒன்றிய பாஜக அரசு 100 நாள் வேலைத் திட்டத்தைச் சிதைக்கும் வகையில் கொண்டு வந்துள்ள புதிய சட்ட மசோதாவைக் கண்டித்தும், அதற்குத் துணைபோகும் அதிமுகவைக் கண்டித்தும் திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளரும், முசிறி சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் மத்திய அரசிற்கு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தால் தொழிலாளர்களின் கூலி குறைக்கப்படுவதையும், மாநில அரசுகளுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படுத்தப்படுவதையும் கண்டித்து நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முழக்கங்கள் எழுப்பினர்,
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு செயல்பாடுகள் குறித்து முக்கிய நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள், தொடர்ந்து தா.பேட்டை மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்கள் இணைந்து தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகப் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது,
முசிறி மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்கள் ஒருங்கிணைந்து, முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பெண்கள் கலந்து கொண்டனர்,
இந்த ஆர்ப்பாட்டங்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், திமுக மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்