மார்க்கெட் பகுதியில் தி.மு.க. அலுவலகம் திறப்பு
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று (ஜூலை 16) திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மாநகர மார்க்கெட் பகுதி கழக அலுவலகத்தை திறந்து வைத்து அப்பகுதிக்குட்பட்ட வட்டக் கழகச் செயலாளர்களுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் திருஉருவச் சிலையை பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தார் இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் ஆர் ஜி பாபு வட்டக் கழக செயலாளர் மனோகரன் பாண்டியன் சுருளிராஜன் ஆர் எம் சுப்பிரமணியன் சாதிக்பாஷா சிலம்பரசன் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
