காலை எழுந்த உடனே மக்கள் பணி; கலக்குகிறார் கவுன்சிலர் செந்தில்!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று காலை தனது வார்டுக்கு உட்பட்ட குறிஞ்சிநகர், மலையப்ப நகர் மெயின் ரோடு, காவேரி நகர் மெயின் ரோட்டில் உள்ள பொது கழிப்பிடம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து,

சாக்கடைகளை தூய்மை செய்து குண்டும், குழியுமாக இருந்த சாலையினை சீர் செய்து மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை கட்சி நிர்வாகிகளுடன் மேற்கொண்டார்.