ஏர் ஹாரன் பயன்படுத்திய பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு

0 342
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் ஏர் ஹாரன் பயன்படுத்திய 20க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏர்ஹாரனை அகற்றி அபராதம் விதிப்பு துறையூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள் நடவடிக்கை.

திருச்சி மாவட்டம் துறையூரில் பேருந்துகளில் ஏர் ஹாரண் பயன்பாடு அதிகமாக இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளருக்கு புகார் வந்தது. இதை அடுத்து துறையூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள் துறையூர் பேருந்து நிலையம் பகுதியில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் ஏர்ஹாரன் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஏர்ஹாரன் பயன்படுத்திய 20க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏர்ஹாரனை அகற்றி அபராதம் விதிக்கப்பட்டது. அகற்றப்பட்ட ஏர்ஹாரண்கள் அதே பேருந்தில் சக்கரத்திற்கு அடியில் வைக்கப்பட்டு உடைக்கப்பட்டது.

சாலை பாதுகாப்பு வார விழா வை முன்னிட்டு தலைகவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தலைகவசம் அணித்திருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினார்

Leave A Reply

Your email address will not be published.