வருவாய்த்துறையினரை கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0 180
Stalin trichy visit

திருச்சி,நவ.3  பள்ளிவாசல் நிலத்தை வருவாய் துறையினர் அளந்து தர கோரி முஸ்லிம் அமைப்பினர் மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் – அரசியல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவெறும்பூர் அருகே உள்ள கல்லணை ரோடு வடக்கு இந்திரா நகர் பகுதியில் மஸ்ஜிதுல் அரபா என்ற பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகிறது. இந்த இடம் அரசு பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடம் என்று ஒரு சிலர் மாநகராட்சி இடம் முறையிட்டதை தொடர்ந்து இந்த இடம் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வந்ததை தொடர்ந்து அந்த பள்ளிவாசல் கட்டும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க திருச்சி மாநகராட்சி உத்தரவிட்டது இதனைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை அளவிட விண்ணப்பிக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர் இடத்தை பத்திரப்பதிவின் படி ஆன்லைனில் பணம் செலுத்தியும், 3 மாத காலமாக அளந்து கொடுக்காமல் 8.10.2025 அன்று மாலை 4.00 மணிக்கு அளந்து தருவதாக அரசு அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் இன்று வரை அதிகாரிகள் வந்து நிலத்தை அளந்து தர மறுக்கும் திருவெறும்பூர் தாசில்தார் மற்றும் அரியமங்கலம் கோட்டம் துணை ஆணையர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் சார்பாக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் திருவெறும்பூர் தாசில்தாரை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டனங்களை தெரிவித்தனர் ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு பணியில் திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.