முசிறியில் செல்லம்மாள் பாரதியார் ரதத்திற்கு உற்சாக வரவேற்பு

0 339
Stalin trichy visit

முசிறியில் செல்லம்மாள் பாரதியார் சிலை ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மகாகவி பாரதியாரின் வம்சாவளியில் வந்த சேவாலயா என்ற தொண்டு நிறுவனத்தை இயக்கியிருப்பவர் முரளிதரன். இவரது தலைமையில் செல்லம்மாள் பாரதியார் சிலை ரதம் சென்னை முதல் கடையம் வரையிலான பயணம் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு மாவட்டங்கள் வழியாக வரும் செல்லம்மாள் பாரதியார் ரதத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகளும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முசிறி கைகாட்டி வந்த ரதத்திற்கு முசிறி தமிழ் சங்க நிர்வாகிகள் மகாலட்சுமி, சிவராஜ், நித்தியானந்தம், மணமேடு குருநாதன், மணி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கலந்துகொண்டு பாரதியார் செல்லம்மாள் ஆகியோரின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், திருஞானம், நகர செயலாளர் சிவகுமார், நகர்மன்றத் தலைவர் கலைச்செல்வி, துணைத் தலைவர் சுரேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் செல்லம்மாள் பாரதியார் ரதம் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, அரசுப்பள்ளி, சமூக தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்றது.முசிறி அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் கல்லூரியின் முதல்வர் ராஜ்குமார் ரத்திற்கு மரியாதை செலுத்தினர். அங்கு பாரதியாரின் கருத்துக்கள் பாடல்கள் நினைவு கூறப்பட்டது.அரசுப் பள்ளியில் பாரதியார் குறித்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவில் முசிறி நகர பொதுமக்கள்,கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.