மணச்சநல்லூர் எம்.எல்.ஏ தலைமையில் தொழில்முனைவோர் கலந்துரையாடல் கூட்டம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன் தலைமையில்
புதிதாக தொழில் தொடங்க உள்ள தொழில் முனைவோரிடமும், TIIC தமிழ்நாடு தொழில் துறை முதலீட்டு நிறுவனம், TID CO தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கலந்துரையாடல் கூட்டம் இன்று மண்ணச்சநல்லூர் வாணியர் திருமண மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த தொழில் முனைவோர் நிகழ்ச்சியில் TIIC தமிழ்நாடு தொழில் துறை முதலீட்டு நிறுவனம் TID CO தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.