சுற்றுச்சூழல் பாதுகாப்பு : நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஜன.8 நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்களால் மணக்கால் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், மணக்கால் கிராமத்தில் நாளந்த வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த விழிப்புணர்வு பேரணியில் மணக்கால் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் கு.இந்திராணி உதவி தலைமை ஆசிரியர், செ.ஹெலன் உமா சாந்தி, ப .மஞ்சுளா இடைநிலை ஆசிரியர், க.செ.கற்பகம் இடைநிலை ஆசிரியர், சு.அமுதா அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது குறித்தும், மரங்களை வளர்க்க வேண்டும் என்பதனைப் பற்றியும் முழக்கம் ஏற்படுத்திக் கொண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து முடக்காயி அம்மன் கோயில் வரை ஊர்வலமாக சென்றனர்.
மேலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விவசாயம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும், உயர்கல்வி குறித்தும், 7.5% இட ஒதுக்கீடு குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது நாளந்தா வேளாண்மைக் கல்லூரியின் மாணவர்கள் ச.வினோத், ஜா.சாம்குமார், ஜெ.சுரேந்தர், ச.சந்தோஷ், பு.சக்தி, க.ராஜேஷ் மற்றும் கோ.சதீஷ் ஆகியோர் நாளந்த வேளாண்மைக் கல்லூரியின் தாளாளர் அல்லி இங்கர்சால், முதல்வர் முனைவர். ஜெ.வெங்கடா பிரபு, முனைவர். பா.குணா இணைப் பேராசிரியர் துறைத் தலைவர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர், ப.நந்தகுமார் முதுநிலை உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர், ம.சுரேஷ் உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடந்து முடிந்தது.