315 பேருக்கான இ.பி.எப்.ஓ. தேர்வு நாளை நடைபெறுகிறது

0 409
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இ.பி.எப்.ஓ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி புத்தூர் காவேரி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்வினை 315 பேர் எழுதவுள்ளனர்.

இந்த தேர்வு பணியினை மேற்கொள்ள ஒரு தேர்வுக்கூட மேற்பார்வையாளர், ஒரு இயங்குக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிலும் துணை கலெக்டர் நிலையில் ஒரு அலுவலர், துணை வட்டாட்சியர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், ஆயுதம் ஏந்திய ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு மையத்தை ஆய்வு செய்யும் பொருட்டு வட்டாட்சியர் நிலையில் ஆய்வு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்வு மையத்தில் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையத்தில் சோதனை செய்திட 2 பெண் போலீஸ் உள்பட மொத்தம் 5 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு அறைகளில் தேர்வு எழுதும் ஒவ்வொறு 24 நபர்களுக்கு 2 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட தகவலை திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.