திருச்சி துறையூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 37 வயது பெண். இவர் மூளை வளர்ச்சி குன்றி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். அதே பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கருப்பையா (46). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த மாற்றுத் திறனாளி பெண்ணிடம் கருப்பையா பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதுடன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிந்து கூலித்தொழிலாளி கருப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.