ஈ.பி.எஸ்.க்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பேன் – அண்ணாமலை பேட்டி
திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இன்று அறிவித்துள்ளார். அவர் பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் கலந்தாலோசித்து விட்டுத்தான் அறிவித்தாரா என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தல் குறித்து யாரிடம் என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமாக இருக்காது. எல்லா தலைவர்களிடமும் பேசியிருக்கிறோம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு, யாருக்கு என்ன பலம் என்பதை காண்பிப்பது மட்டும் முக்கியமல்ல. 2 மாதத்தில் இந்த இடைத்தேர்தலை மக்கள் மறந்துவிடுவார்கள். ஆனால் நாம் 2024 பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும்.
அ.தி.மு.க ஈ.பி.எஸ் அணி கூட்டணி பெயரை மாற்றி இருப்பது குறித்து உரிய நேரத்தில் பதில் அளிப்பேன். என்றார்.