மாலை தாண்டும் போட்டி : போட்டி போட்டு ஓடிய காளைகள்

0 370
Stalin trichy visit

திருச்சி, மே 28 திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த பொம்மாகம்மாவூரில் ஸ்ரீமாரியம்மன் கோவில் உற்வசத்தை முன்னிட்டு மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது. இதற்காக கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதை அடுத்த பொருட்கள் குறிப்பிட்ட பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பச்சை மரம் நடப்பட்டது. இதையடுத்து தாரை தப்பட்டை முழங்க காளைகள் போட்டி நடைபெறும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதையடுத்து காளைகள் போட்டி போட்டுக் கொண்டு வெற்றி இலக்கை அடைந்தது. இந்த நிகழ்வில் சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது.

Leave A Reply

Your email address will not be published.