ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

0 19
Stalin trichy visit

F¼„C, Ýè.31  ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலில் பவித்ரோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று நம்பெருமாள் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில், நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருக்கொட்டாரத்தில் எழுந்தருளினார்.

இதைத்தொடர்ந்து ஆகம முறைப்படி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார். இதில் ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். மேலும் பவித்ரோற்சவ விழாவைையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டு வழிப்பட்டு செல்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.