காவல் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

0 336
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 14. இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு திருச்சி மாவட்டத்தைச் சோந்த தகுதியான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பிரதீப்குமார் அழைப்பு விடுத்துள்ளா.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்
சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான மொத்தம் 3552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் 5 சதவீத இடங்கள் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சக் கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். 01-.07.-2022 அன்று 47 வயதிற்கு மேற்படாத, படைப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியிலிருந்து 3 ஆண்டுகள் நிறைவு செய்யாத முன்னாள் படைவீராகள் இந்தப் பணிகளுக்கு 15-.08.-2022-க்குள் விண்ணப்பிக்கலாம். இணைய முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த விவரத்தை 20-.08.-2022-க்குள் திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா நல துணை இயக்குநா அலுவலகத்திற்கு தெரிய வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.