உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பயிற்சி வகுப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரம் திருவாசி கிராமத்தில் 2022 – 23 தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு நடைபெற்றது.
இதில் வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா வரவேற்பு உரை ஆற்றினார். வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயராணி திட்ட விளக்க உரை ஆற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் பானு முருகேசன் தலைமையேற்று தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கினர். குமுளூர் வேளாண்மை கல்லூரி மண்ணியல் துறை ஆய்வாளர் சிவரஞ்சனி மண்ணின் தன்மை குறித்தும், மண்வளம் குறித்தும், மண்வள பாதுகாப்பின் அவசியம் குறித்தும் உரையாற்றினார். துணை வேளாண்மை அலுவலர் சின்னப்பாண்டி நன்றி உரை ஆற்றினார்.
மண்ணச்சநல்லூர் வட்டாரத்தின் வேளாண்மை உதவி அலுவலர்கள் பாஸ்கர், பாபு, ஆனந்த், பன்னீர்செல்வம், பாலாஜி மற்றும்
முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட 26 விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்தப் பகுதி வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.