பாம்பு கடித்து விவசாயி பலி

0 342
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே சரடமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறுகனூர் அருகே சரடமங்கலத்தைச் சேர்ந்தவர்   தங்கராஜ்(65). இவர் விவசாயம் தொழில் செய்து வருகிறார். கடந்த 17 ம் தேதி தனது தோட்டத்தில் புற்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை விஷ பாம்பு கடித்துள்ளது. இதனால் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக் கவனித்த அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.