திருமங்கலத்தில் ஸ்ரீ ஆனாய நாயனார் குருபூஜை விழா
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு லோகநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு சாமவேதீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்ரீ ஆனாய நாயனார் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இறைவன் ஆன்மாக்களாகிய நாம் ஈடேற பல வடிவங்களில் திருக்கோயில்களில் மூர்த்தி,தலம்,தீர்த்தம் என்ற அமைப்பில் அருள் செய்கிறார். இவ்வாறு எல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற தலம் திருமங்கலத்தில் இறைவன் சாமவேதீஸ்வரர் என பெயர் கொண்டும் இறைவி லோகநாயகி என்ற பெயருடன் அருள் பாலிக்கிறார்.
இத்தலத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் புல்லாங்குழலில் இறைவனது ஐந்தெழுத்தை உள்ளம் உருகி வாசித்த அளவில் இறைவன் மகிழ்ந்து உமாதேவியுடன் இடப வாகனத்தில் காட்சியளித்து ஆட்கொண்டார். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை அஸ்தம் நட்சத்திரத்தில் முக்தி கொடுக்கும் திருவிழா நடைபெறுகிறது.அலை மலிந்த புனல் மங்கை ஆனாயர்க்கு அடியேன் என்று சுந்தராலும் நம்பியாண்டார் நம்பியாலும் சேக்கிழாரது பெரிய புராணத்திலும் அறிந்து கொள்ளலாம். இந்நிலையில் ஸ்ரீ ஆனாய நாயனாருக்கு குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு காலை பஞ்ச மூர்த்திகளுக்கு மகாபிஷேகம் நடைபெற்றது.பின்னால் இரவு 7 மணிக்கு மேல் பஞ்ச மூர்த்திகள் அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ ஆனாய நயனார் குருபூஜை நடைப்பெற்று திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

click the image to chat on whatsapp
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள் செந்தில்,பாலசுப்ரமணி குருக்கள்கள் முன்னிலையில் செய்திருந்தனர்.
