தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம்

0 304
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர்காத்திருப்புபோராட்டம் ஆறாவதுநாளாகநடைபெற்றது, சோபனபுரம்விவசாயி அமிர்தலிங்கம்தலைமையில்நடைபெற்றது,இதில்
உப்பிலியபுரம் பகுதியில் பேருந்து நிலைய அமைக்கவேண்டும்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைபாதுகாத்திட உப்பிலியபுரத்தில் தினசரி காய்கறிசந்தையை அமைத்து தரவேண்டும்,
சோபனபுரம், கொப்பம்பட்டி, நாகநல்லூர், பாதர்பேட்டை, மங்கப்பட்டி, வைரிசெட்டிபாளையம் பகுதியில் நடைபெற்று வந்த நமது பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடத்திட புதிய நடைமுறைகளை களைத்து பழைய முறையில் ஜல்லிக்கட்டு விழாவை சீரும் சிறப்புமாக நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்
உப்பிலியபுரம் பகுதிகளில் உலர்கலத்துடன் கூடிய சேமிப்புக் கிடங்குகள் மூன்று பிர்காக்களுக்கும் வேண்டும்.
இப்பகுதியில் உள்ள ஏரிகளில் இருக்கும் சீம கருவேளியை அப்புறப்படுத்தி பாதுகாத்திட வேண்டும்,
உப்பிலியபுரத்தை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும்
உப்பிலியபுரத்தில் அரசு கலை அறிவியல்கல்லூரி அமைதிட வேண்டும்,
உப்பிலியபுரம்பகுதி இளைஞர்களின் விளையாட்டுக் கனவை நினைவாக்க எங்கள் பகுதியில் நவீன விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய விளையாட்டுதிடல் அமைத்துதரவேண்டும்
போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில்ஈடுபட்டனர், இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ஒசரப்பள்ளி ஜெயராஜ், மற்றும் பங்காருசாமி, மாவட்ட அவைத்தலைவர் முருகப்பட்டி நடராஜன், மாவட்ட அமைப்புசெயலாளர்பொன்மாறன்தலைமையில் நடைபெற்றது. காத்திருப்பு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.