குடிநீர் தொட்டியில் செத்து கிடந்த அணில் : குடிநீராக குடித்த கிராம மக்கள்

0 253
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 12 குடிநீர் தொட்டியில் செத்து கிடந்த அணில், அந்த தண்ணீரை பல நாட்களாக குடிநீராக அதை குடித்த அவலம் மணப்பாறையில் நடைபெற்றது. வேங்கை வயல் சம்பவத்திற்கு பிறகு மேல்நிலை குடிநீர் தொட்டியை பார்க்கும் போது ஒரு வித அச்சம் ஏற்படுகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருநெல்லிப்பட்டி ஊராட்சி குப்பனார்பட்டியிலுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் அணில் ஒன்று செத்து பல நாட்களாக கிடந்துள்ளது. உயிரிழந்த அணிலின் உடல் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து குடிநீரில் கலந்துள்ளது. அந்த தண்ணீரைத்தான் கிராமமக்கள் பல நாட்களாக குடித்துள்ளனர். மேல்நிலை நீர்த்தொட்டியை பராமரிப்பவர்களின் அலட்சியம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. ஊராட்சி நிருவாகம் நடவடிக்கை எடுத்து மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்று கிராமமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.