கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜூன் 22 கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தினால் இதுவை 50 க்கு மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் பலர் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அதிமுக, , உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விவசாய அணி சார்பாக விவசாய அணி மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் விஷச்சாராயம் விற்றவர்களை கைது செய்ய வேண்டும் மேலும் காவல்துறை கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் மெத்தனப் போக்கை ஓய்வு பெற்ற நீதிபதி கொண்டு விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும். கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்
இந்த நிகழ்விற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் எனக் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர் தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்