கிராம சபை கூட்டத்தில் தந்தை ரோவர் வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் மாணவர்கள் கிராம சபை பொதுக் கூட்டத்தில் பங்கேற்பு
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், வாளாடி கிராமத்தில் இன்று நடைபெற்ற கிராம சபை பொதுக் கூட்டத்தில் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் ஒரு பகுதியாக இதில் கலந்து கொண்டனர்.
இந்த கிராம சபை பொதுக்கூட்டத்தில் மக்கள் தங்களின் குறைகளை ஊரக செயலர் திரு. கார்த்திகேயன் முன் எடுத்துரைத்தனர்.
இதன் மூலம் வாளாடி கிராமத்தில் நிலவிவரும் குறைகள் மற்றும் நிறைகளை பற்றியும், விவசாயத்தில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றியும் தெரிந்து அவர்களுக்கு அதனை மேற்கொள்ளும் யுத்திகளை மக்கள் முன் எடுத்து வைத்தனர்.
நெல் மற்றும் வாழை விவசாயத்தில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். இதற்கான தீர்வாக காட்டுப்பன்றி விரட்டி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர். அதுமட்டுமல்லாமல் போதிய நீர்ப்பாசன வசதி இல்லை எனவும் ஊரக செயலர் திரு.கார்த்திகேயனிடம் தெரிவித்தனர்.
இதனை தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் மாணவர்கள் அஹமது இஸ்மாயில்.அ,அன்புச்செல்வன்.நீ,அர்ச்சுதன் .பி,அருண்குமார்.அ,பாலாஜி. செ,தனுஷ்ராஜ்.ச,தரணி.தா,தருண்.தி,பிரான்சிஸ் சேவியர்.எ,கோகுல்.ஏ ஆகியோர் செல்வி ரா.பிரியங்கா உதவி பேராசிரியர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் வேளாண் விரிவாக்கத்துறை, மு.அப்துல் ரகுமான் உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் தாவர மரபியல் மற்றும் இனப்பெருக்க துறை, சு.சுகுனா உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் பயிர் நோயியல் துறை ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த கிராம சபை பொதுக்கூட்
டத்தில் கலந்துகொண்டனர்.