மணப்பாறையில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக கள ஆய்வு
திருச்சி, செப். 12 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) CPI(ML) கட்சியின் சார்பாக மணப்பாறை வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் வட்டாச்சியர் அலுவலகம்,சிறைதுறை கட்டிடம், பத்திரபதிவுதுறை, காவல்நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், சார்நிலைகருவூலம், உள்ளட்டதுறை அலுவலகங்களுக்கு வரும் முதியோர்கள், பெண்கள், தினந்தோறும் ஆயிரகணக்கான மக்கள்வர கூடிய நிலையில் வட்டாச்சியர் அலுவலக வளாகத்திற்குள் கட்டபட்டு செயல்படாமல் இருக்க கூடிய சிறுநீர் கழிப்பிட கட்டத்தை திறக்க கோரி பல முறை அரசு அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை திறக்கபடாமல் இருக்கும் சிறுநீர் கழிப்பிட கட்டிடத்தை திறக்ககோரியும்,
மணப்பாறை நகர பகுதிகளில் பள்ளி மாணவர்களையும் பொதுமக்களையும் அச்சுருத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கபடவில்லைதெருநாய்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்ககோரியும்.
மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 27 வது வார்டு நேருஜி நகரில் சுமார் 50 குடும்பங்கள் பயன்படுத்தும் நகராட்சியால் போடப்பட்ட மினிடேங்க் பழுதடைந்து உள்ளதால் அந்தபகுதி பொதுமக்கள் குடிதண்ணீர் இல்லாமல் அவதிபடும் நிலை உள்ளது.உடனே குடிநீர் அத்தியாவசித்தை கருத்தில் கொண்டு பழுதடைந்த மினிடேங்கை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரகோரியும். மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 27 வது வார்டு நேருஜீ நகரில் 47 ஆண்டுகளாக குடியிருக்கும் 40க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை,நேருஜி நகரில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்ககோரியும், உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தி CPI(ML) கட்சியின் சார்பாக பொதுமக்களுடன் கையெழுத்து இயக்கம் நடத்தி மனுவை நகர செயலாளர் P.பாலு தலைமையில் மணப்பாறை சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்களுடன் மனு அளிக்கபட்டது. நிகழ்வில் CPI(ML) ஒன்றிய செயலாளர் M.தங்கராசு, AICCTU பொதுகுழு உறுப்பினர்
இளையராஜா J. பாஸ்கர், A. குமரேசன், M. குமார், P.பெருமாள், ரமேஷ் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்,
இந்நிலையில் 27 வது வார்டு பொதுமக்களை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல்சமது நேர்முக உதவியாளர் காதர் மொய்தீன் பொதுமக்களிடம் குடிநீர் பிரச்சனை சம்மந்தமாக களஆய்வு மேற்கொண்டு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண்வதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார். நிகழ்வில் CPI(ML) நகர செயலாளர் பி.பாலு உடன் இருந்தார்.