துறையூர் விவசாயிகள் பெங்களூருக்கு பட்டறிவு பயணம்
திருச்சி, செப். 17 திருச்சிராப்பள்ளி மாவட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் சார்பில், துறையூர் வட்டாரத்தை சேர்ந்த 20 விவசாயிகளை அங்கக மற்றும் இயற்கை பண்ணையம் என்னும் தலைப்பில் ஐந்து நாள் பட்டறிவு பயணமாக கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், உழவர் பயிற்சி நிறுவனம், காந்தி கிருஷி விக்யன் கேந்திரா ஆகிய நிறுவனங்களுக்கு, திருச்சிராப்பள்ளி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் திரு கண்ணன் அவர்களின் அறிவுரையின் பேரில், உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் திருமதி ஆனந்த செல்வி அவர்களின் வழிகாட்டுதலில், துறையூர் வேளாண்மை உதவி இயக்குனர் திரு ரவி அவர்கள் விவசாயிகளை பட்டறிவு பயணத்திற்கு அனுப்பி வைத்தார்.