கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப யூடியூப் சேனல்களுக்கு தடை: தமிழக அரசு உத்தரவு

0 14
Stalin trichy visit

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள
கோவில் நிகழ்வுகளை யூடியூப் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தால் நடவடிக்கை
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிகழ்வு களை யூடியூப் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமி ழக அரசு உத்தரவிட்டுள் ளது.

இந்து சமய அற நிலையத்து றையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் முன் அனுமதியின்றி சுவாமி அலங் காரம் மற்றும் அபிஷேக நிகழ்வுகளை யூடியூப் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி ஒளிபரப்பு செய்யும் சேனல்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் படும் என்று இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் அனைத்து மண்டல இணை ஆணையர் கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்க ளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:-

கோவில்களில் நடைபெறும் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா, மலைக் கோட்டை விநாயகர் சதுர்த்தி விழா, மதுரை சித்திரை திரு விழா கந்தசஷ்டி விழா, கார்த் திகை தீப திருவிழா போன்ற முக்கிய திருவிழாக்கள் மற்றும் ளது. திருக்குடமுழுக்கு போன்ற முக்கிய நிகழ்வுகளை செயற் கைக்கோள் தொலைக்காட்சி கள் நேரடி ஒளிபரப்பு செய்ய அரசு அனுமதி வழங்கி வரு கிறது. 2003-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி கோவில் வளாகங்களில் திரைப்பட படப்பிடிப்பு மற் றும் சீரியல் படப்பிடிப்புக ளுக்குதடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதே போல், ஆவணப்ப டங்கள் மற்றும் நேரடி ஒளிப ஏப்புகளுக்கு மட்டுமே விதி களில் தளர்வுகளின்றி அரசு அனுமதி அளித்து வரும் நிலையில், கோவில்களின் நிகழ்வுகள் உள்பட ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே செயல்படும் முக்கிய ஆன்மிக யூடியூப்சேனல்கள், கோவில்க ளின் அன்றாடசுவாமி அலங் காரம் மற்றும் அபிஷேகங் களை முன் அனுமதியின்றி நேரடி ஒளிபரப்பு செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, கோவில்களில் அனுமதியின்றி நடைபெறும் யூடியூப் நேரடி ஒளிபரப்பு களை உடனடியாக தடை செய்யவும், அவ்வாறு ஒளிப ரப்பும் சேனல்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அனைத்து கோவில் செயல்அலுவலர்களுக்கும் அறிவுறுத் தப்படுகிறது. இதுதொடர் பான விரிவான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை விரைவில் இந்து சமய அறநி லையத்துறை ஆணையரகத்துக்கு அனுப்பி வைக்கவேன் டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.