தட்டு ரிக்ஷா ஓட்டுபவரை தாக்கிய ரவுடி கைது
திருச்சி செப். 11 திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் ( 55). தட்டு ரிக்ஷா ஓட்டுநர். இவரும் இவரது மனைவியும் தனது உறவினரை சந்திக்க ராமமூர்த்தி நகருக்குச் சென்றனர். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த நபர்,தங்கவேலு மற்றும் அவரது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கினார். இதில் தங்கவேலுவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர் சேர்ந்த ஏழுமலை ( 31,) என்ற ரவுடியை கைது செய்தனர்.
வாலிபரை தாக்கி பணம் பறித்த ரவுடி கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பாச்சூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜ் (29).இவர் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை டாஸ்மாக் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக வந்த வாலிபர் மது அருந்த பணம் கேட்டு கட்டையால் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த வீரையன் (23)என்ற ரவுடியை கைது செய்தனர்.