தீத்தடுப்பு, பேரிடர் மீட்பு போலி ஒத்திகை பயிற்சி

0 268
Stalin trichy visit

தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு
தீத்தடுப்பு, பேரிடர் மீட்பு  விபத்திலிருந்து பொதுமக்களைமீட்பது குறித்த போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள எஸ்்ஆர்.எம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு தீத்தடுப்பு பேரிடர் மற்றும் விபத்தில் இருந்து பொதுமக்களை மீட்பது குறித்து போலி ஒத்திகை பயிற்சி திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் திருமதி அனுசுயா தலைமையில் இன்று நடைபெற்றது.

பணியின் போது உயிர் நீத்த வீரர்களின் நினைவு நாளை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ம் தேதி தீத்தொண்டு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 14ம் தேதியன்று பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஒரு வார காலம் நடைபெறும் இந்த தீத்தொண்டு வார விழாவில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் சமயபுரம் மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் இறுதி நாளான இன்று எஸ்.ஆ.ர்எம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தீத்தடுப்பு பேரிடர் மற்றும் விபத்தில் இருந்து பொதுமக்களை மீட்பது குறித்து போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வை சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் ஒருங்கிணைத்து நிகழ்ச்சி நடத்திக் காட்டினார். வீரர்கள் தீ விபத்து ஏற்பட்டால் பொதுமக்களை எப்படி காப்பாற்றுவது,பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்பது, விபத்து இடிபாடுகளிலிருந்து பொதுமக்களை எப்படி மீட்பது உள்ளிட்டவைகள் குறித்து செய்முறை விளக்கம் செய்து காட்டினார் .

இந்நிகழ்வில் திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி வளாக நிர்வாக டீன் டாக்டர் பிரபாகரன், வளாக இயக்குனர் டாக்டர் மால்முருகன் மற்றும் மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள், நர்சிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பாதுகாவலர்கள் என 700 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.