முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை – கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு
திருச்சி, செப். 5 திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை – கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு
தமிழக முன்னாள் அமைச்சர் கே என் நேருவின் திருச்சி தில்லைநகர் 5வது குறுக்கத் தெருவில் இருக்கும் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நகராட்சி நிர்வாகத் துறையில் அவர் அமைச்சராக இருந்த பொழுது வேலை வாங்கி தருவதாக கூறி ஆயிரம் கோடி ரூபாய் பணம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் கே என் நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை ஈடுபட்டது அறிந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மண்டல தலைவர் மதிவாணன் மற்றும் கட்சியினர் அவரது வீட்டிற்கு முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.