எலி பேஸ்ட் சாப்பிட்ட கல்லூரி கல்லூரி மாணவி உயிரிழப்பு

0 86
CM

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள குன்னங்குளத்தில் 17 வயதான கல்லூரி மாணவி எலி பேஸ்ட் சாப்பிட்டு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HAPPY BIRTHDAY

மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள குன்னங்குளத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் 17  வயதான லாவன்யா. இவர் முசிறி பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி மாணவி அதிக நேரம் செல்போன் பார்த்து பயன்படுத்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை மானவியின் தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த கல்லூரி மாணவி கடந்த 19 ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் இச்சம்பவம்  குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!