முசிறி அருகே மீன்பிடி திருவிழா…

0 352
Stalin trichy visit

முசிறி அருகே மீன்பிடி திருவிழா 25 -கிராமத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர்.

 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள நெய்வேலி ஊராட்சியில் பாசன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி சுமார் 145 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. ஏரிக்கு மழைக்காலங்களில் கொல்லிமலையில் இருந்து மழை நீர் திருத்தலையூர் ஏரி வழியாக வந்து நிரம்பி நெய்வேலி ஏரிக்கு வந்தடையும். பின்பு மழை நீர் சித்தாம்பூர் ஏரிக்கு சென்று அந்த ஏரியும் நிரம்பினால் மழைநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கும். இந்நிலையில் நெய்வேலி ஏரியில் நேற்று மீன் பிடி திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பொதுமக்கள் காவல் தெய்வமான பூவாயி தெய்வத்திற்க சிறப்பு அபிஷேக ஆராதனைகளை நடத்தி வழிபாடு நடத்தினர். பின்னர் முக்கியஸ்தர்கள் மீன் பிடி விழாவை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.உடனே திரண்டு இருந்த பொதுமக்கள் ஆர்வமுடன் ஏரியில் இருந்த தண்ணீரில் பாய்ந்து மீன் பிடிக்க தொடங்கினர். இந்த ஏரியில் நெய்வேலி கிராமத்தைச் சுற்றியுள்ள 25- கிராம பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் உற்சாகமாக மீன் பிடித்தனர். அப்போது கெண்டை, வாழைமீன், கெளுத்தி, ஜிலேபி, விரால், உள்பட பல்வேறு வகையான மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர். வலைகளில் இரண்டு கிலோ முதல் எட்டு கிலோ வரையிலான பெரிய மீன்கள் பிடிபட்டது.

பிடித்த மீன்களுடன் வாலிபர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்து மகிழ்ந்தனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த யோகநாதன் என்பவர் கூறும் போது ஏரிகளில் மீன் பிடி திருவிழா என்பது மிகவும் பாரம்பரியமானது. மழை நீரில் ஏரிகளுக்கு வந்து சேரும் மீன்கள் தங்கள் முட்டைகளை மணலில் பொறித்திருக்கும்.
இது போன்ற மீன்பிடி திருவிழாவின் போது மீன் பொறித்துள்ள முட்டைகள் கால் பாதங்களினால் சேற்றில் அழுத்தப்படும். அடுத்த மழைக்காலம் தொடங்கி ஏரியில் தண்ணீர் வரும் பொழுது இந்த முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிப்படும். மீன் குஞ்சுகள் பொறித்த முட்டைகள் மணல் படுகையில் மேலே இருந்தால் வெயில் காரணமாக வீணாகிவிடும் என்பதால் மீன்பிடித் திருவிழாவில் வளர்ந்த மீன்களை பிடிப்பதும் , மீன் பொறித்துள்ள முட்டைகளை பாதுகாப்பது என இரு தொன்று தொட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது. ஏரியில் கலங்கிய தண்ணீரில் தெளிந்த மனதுடன் சகோதர பாசத்துடன் அனைவருடன் சேர்ந்து மீன்பிடிப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.