வாடகை தொகையை செலுத்தாததால் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் 5 கடைகளுக்கு ‘சீல்’

0 15
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 30  வாடகை தொகையை செலுத்தாததால்
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் 5 கடைகளுக்கு ‘சீல்’:
மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

திருச்சி சத்திரம் பஸ் நிலைய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பஸ் நிலையத்துடன் வணிகவளாகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் ஒவ்வொன்றுக்கும் மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு மாதமும் வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வணிக வளாகத்தில் உள்ள 5 கடை உரிமையாளர்கள் கடந்த சில மாத காலமாக தொடர்ந்து வாடகை கட்டாமல் இழுத்து அடித்து வந்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப் பப்பட்டது. ஆனால் நோட்டீஸ் அனுப்பியும் கடை உரிமை யாளர்கள் வாடகை பணத்தை கட்டாத காரணத்தால் மாநகராட்சி கமிஷனர் வீர்பிரதாப் சிங் உத்தரவு பேரில், ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் சீனிவாசன் மேற்பார்வையில் மாநகராட்சி அதிகாரிகள் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் வாடகையை செலுத் தாத 5 கடைகளுக்கு நேற்று ‘சீல்’ வைத்து பூட்டினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.