லால்குடி – புள்ளம்பாடி இடையே மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க நடவடிக்கை

0 17
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 30  லால்குடி – புள்ளம்பாடி இடையே மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க நடவடிக்கை . தண்டவாள புனரமைப்பு பணிகளை கோட்ட மேலாளர் ஆய்வு

திருச்சி கோட்டத்துக்கு உட் பட்டலால்குடி-புள்ளம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் இயக்க வேகத்தை மணிக்கு 130 கிலோ மீட்டராகஉயர்த்தரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக லால்குடி புள்ளம் பாடி இடையே ரெயில் தண் டவாளத்தின் அடித்தளத்தை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகளை திருச்சி கோட்ட ரெயில்வே மேலா ளர் பாலக்ராம் நேகி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, அனைத்து பணிகளும் பாது காப்பு நடைமுறைகளை துல் லியமாகப் பின்பற்றி மேற் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

மேலும் லால்குடி மற்றும் புள்ளம்பாடிக்கு இடையே உள்ள இன்டர்மீடியட் பிளாக்
சிக்னல் அமைவிடத்தில், ரிலே அறையின் கதவு திறப்பு. மற்றும் மூடல் நிலையை தொலைவிலிருந்து கண்கா ணிக்கும் அமைப்பையும் அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கூடுதில் கோட்டமேலாளர் சத்தியர்த் தனன் தன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.