காவிரி, கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 243
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 28 காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் கர்நாடகாவில் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால், அணையிலிருந்து உபரி நீரானது சுமார் 75,000 கன அடி தற்போது திறந்துவிடப்படுகிறது. காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உபரி நீரானது (28.07.2025) அன்று திருச்சிமாவட்டம், முக்கொம்பு வந்தடைந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் முழுமையாக திறந்து விடப்படும். எனவே, காவிரி, கொள்ளிட கரையோர பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சலவைத்தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்கள் உடமைகளுடன் மேட்டுப்பாங்கான, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

முக்கியமான படித்துறைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் / வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கிராமங்களில் தங்கியிருந்து கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
நீர்வரத்து அதிகமாக வரும் என்பதால் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற முறையில் கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ செல்பி எடுக்க கூடாது. கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கு நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும், பாலங்கள் தவிர, பாதுகாப்பற்ற இடங்களில் ஆற்றை கடக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.