காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
திருச்சி, மார்ச் 10 திருச்சி காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க சார்பில் 28 ம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் தக்ஷிணகாளி சித்தர் பீடம் நிறுவனர் தவத்திரு அறம்மிகு அடிகளார் பங்கேற்பு*
திருச்சி காந்தி மார்கேட் பகுதியில் உள்ள அனைத்து காய்கறி கடை வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் சேர்ந்த சமயபுரம் மாரியம்மனுக்கு 28ம் ஆண்டு, முதல் வார பூச்சொரிதலை நேற்று எடுத்து சென்றனர்.
இந்ந விழாவிற்கு ஶ்ரீ தக்ஷிணகாளி சித்தர் பீடம் நிறுவனர் தவத்திரு அறம்மிகு அடிகளார் கலந்து கொண்டு வாகனத்தில் எழுந்தருளிய அம்மனின் திருஉருவ சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டினார்.
இதில் திரளான வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று அவரிடம் ஆசி பெற்றனர்.
மேலும் இந்த 28ம் ஆண்டின் பூச்சொரிதல் விழாவின் ஏற்பாடுகளை காந்தி மார்கேட் வியாபாரிகள் சங்க தலைவர் கமலக்கண்ணன், சேகர், மாரியம்மன் மற்றும் ஶ்ரீதர் செய்திருந்தனர்.