தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த நாட்டுப்புற கலைஞர்கள்

0 487
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 8  நாட்டுப்புற கலைஞர்களுக்கு இதுவரை இல்லாத வகையில் சலுகைகள் அறிவித்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கலைஞர்கள்.

தமிழ்நாடு இசை நாடகக் கலைஞர்களின் மாநில பேரவை சார்பில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பேரவை மாநில தலைவர் எம்.ஆர்.எம்., பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்தநாள் விழாவில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

நாடக கலைஞர்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு பல விதமான சலுகைகளை அறிவித்துள்ளது பாராட்டுதலுக்குறியது அதனை போற்றுதலுக்குறியதாக கருதுகிறோம். நாடக மற்றும் கிராமிய கலைஞர்கள் அரசு பேருந்துகளில் பயண சலுகைகளோடு எந்தவித இடர்பாடும் ஏற்படாத வண்ணம் பயணிக்கலாம் என்று புதிய ஆணையை பிறப்பித்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் குளிர்சாத வசதி பேருந்துகளிலும் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்புக்கும், அறுபது வயதுக்கு மேலான கலைஞர்கள் அவருக்கு ஒருவர் துணையாக செல்ல பயணச்சலுகையும் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது. நாடகக் கலைஞர்களை பெருமைப்படுத்திய செயலாக கருதுகின்றோம். கடந்த 10 ஆண்டு காலம் செயல்படாமல் இருந்த நாட்டுப்புற கலைகள் நலவாரியத்திற்கு புத்துயிர் பெற வைத்து கலைஞர்களுக்கு நலத்ததிட்டங்கள் வழங்கிவரும் தமிழக அரசை வரவேற்பதாக தெரிவித்தனர்.
விழாவில் மணப்பாறை நாடக கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் நாடக கலைஞர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ள அரசுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் கலைஞர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்து கோரிக்கை மனுவை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பொதுச்செயலாளர் பழ.காந்தி, பேரவை மாநில பொருளாளர் தமிழ்நாடு நாட்டுபுற கலைஞர்கா நல வாரியம் நிர்வாகக்குழு உறுப்பினர் பண்ணை.சிங்காரவேலன், மாநில கிளர்ச்சி பிரச்சார குழு தலைவர் த.இந்திரஜித், கலைமாமணி கே.எஸ்.கிருஷ்ணப்பா, சிபிஐ., நகரச்செயலாளர் முகமது உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.