உணவு பாதுகாப்பு சான்று பெறுவதற்கான பயிற்சி முகாம்

0 291
Stalin trichy visit

 

திருச்சி, ஜூலை 29 திருச்சி மாவட்டம்,  தா.பேட்டையில் பிருந்தாவனம் திருமண மண்டபத்தில் உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் சான்று பெறுவதற்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

உணவு பாதுகாப்பு அலுவலர் ஜஸ்டின் அமுல்ராஜ் தலைமை வகித்தார்.
தா.பேட்டை வர்த்தக தலைவர் நந்தகுமார் அனைவரையும் வரவேற்றார். அப்போது உணவு பாதுகாப்பு பிரிவு பயிற்சியாளர்கள் சதீஷ்குமார், அருண் ஆகியோர் பாதுகாப்பு, சுகாதார முறையில் உணவு பொருட்களை தயார்படுத்துதல், உணவு தர கட்டுப்பாடு சான்றிதழ்களை வியாபாரிகள் முறையாக பதிவு பெற்று பராமரிப்பது அவசியம் குறித்தும் பயிற்சி அளித்தனர். இதில் வர்த்தக சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.