குப்பைகள் சேகரிக்க மின்கல வாகனம் வழங்கல்

0 211
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 29 திருச்சி மாவட்டம்,  தொட்டியம் பேரூராட்சிக்கு குப்பைகள் சேகரிக்க மின்கல வாகனம் மற்றும் பொது கழிவறைகளை சுத்தம் செய்ய நவீன இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7.61 லட்சம் மதிப்பில் 5 மின்கல வாகனம்,தூய்மை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பொது கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு நவீன இயந்திரம் ஆகியவற்றையும்,
திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கினார். வழங்கப்பட்டுள்ள மின்கல வாகனம் மூலம் தினசரி சுமார் 400 வீடுகள் வரை குப்பைகளை பெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு,பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்த நாயகி, மற்றும் அலுவலர்கள் அரசின் திட்டங்கள் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் திருஞானம் தங்கவேல் நகர செயலாளர் விஜய் மற்றும் நிர்வாகிகள் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.