மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0 234
Stalin trichy visit

 

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டித்தும்,கலவரத்தில் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த பெண்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியும் குறித்த நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் கலை தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், சரவணன், மோகனாம்பாள் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
அப்போது மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பிரதமர் பாராளுமன்றத்தில் பதில் கூற வேண்டும்,
கலவரத்தை முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்த தவறியமைக்கு மத்திய அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பேசினர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.