அண்ணா விளையாட்டு அரங்கம் நடைபாதையில் உணவு வீதி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு:-
திருச்சி, செப். 4 திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் நடைபாதையில் உணவு வீதி – திருச்சி கலெக்டர் பிரத்திக் தாயள் ஆய்வு:-
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 6 மாநகராட்சிகளில் உணவு வீதி அமைக்கப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ரேஸ் கோர்ஸ் சாலை பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக ஏராளமான ஆரோக்கியமான உணவுக் கடைகள் மற்றும் தெருவோரக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் (ரேஸ்கோர்ஸ் சாலை) அருகே ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான சூப் வகைகள், தானிய உணவுகள், பாரம்பரிய உணவுகள், காபி & டீ ஸ்டால்கள் மற்றும் பல்வேறு உணவு வகைகள் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி மாநகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை இணைந்து இப்பகுதியில் ரூ.30 லட்சம் செலவில் அதிகாரப்பூர்வ உணவு வீதி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் புதிய உணவு வீதி திட்டத்தின் கீழ், இங்கு நடைபாதை பிளாக் கற்கள், சுத்தமான குடிநீர் தொட்டி, கை கழுவும் இடம் மற்றும் அமர்ந்து சாப்பிடும் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரத்தீப் தாயள் மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் பகுதியில் அமைய உள்ள உணவு வீதி இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.