மணப்பாறை அருகே அமைச்சர் தொகுதியில் மணல் திருட்டு: த.வெ.க. நிர்வாகிக்கு சொந்தமான வாகனங்கள் பறிமுதல்

0 11
Stalin trichy visit

திருச்சி, செப். 4 மணப்பாறை அருகே அமைச்சர் தொகுதியில் ஆற்றில் மணல் அள்ளிய 3 ஜேசிபி. 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்.

தவெக ஒன்றிய செயலாளர் சொந்தமான வாகனம் என போலீசார் விசாரணை தெரியவந்துள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணியின்போது தோண்டப்பட்ட மணல் ஆற்றினுள் குவித்து வைக்கப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் மூன்று ஜேசிபி மூலம் டிப்பர் லாரிகளில் மணல் அள்ளப்படுவந்துள்ளது. இதுகுறித்த தகவலின்பேரில் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணல் அள்ளிய 3 ஜேசிபி மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளை பிடித்தனர். உரிய அனுமதி பெற்று மணல் அள்ளுவதாக வாகனங்களின் ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கான ஆவணங்களை காட்டாததால் போலீசார் ஐந்து வாகனங்களையும் மணப்பாறை காவல்நிலையத்திற்கு எடுத்துவந்தனர். மேலும் வாகனங்களின் ஓட்டுனர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் மூன்று வாகனங்கள் தவெக மணப்பாறை கிழக்கு ஒன்றியச் செயலாளர் சரவணன் என்பவருக்கு சொந்தமான வாகனங்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியான சமுத்திரத்தில் தவெக நிர்வாகி மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.