1,050 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது

0 16
Stalin trichy visit

திருச்சி, செப். 4 தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டத்தின் மூலம் அத்தியாவசியப்பண்டங்களை விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு
வருகின்றனர்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையின்  அலுவலர்கள்  தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும், கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, 01.01,2026 முதல் 03.09.2026 வரை குற்றப்புலனாய்வுத்துறை திருச்சி அலகில்
234 வழக்குகள் பதிவுமொத்தம் செய்யப்பட்டுள்ளது. இக்குற்றங்களில் ஈடுபட்ட 240 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது விநியோகத்திட்ட பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,

அத்துடன் கடந்த 22.08.2026 ம் தேதி TN 07AU 6688 maruti omni  வாகனத்தில் 2500 கிலோ ரேசன் அரிசி கடத்திய குற்றத்திற்காக திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர்,  பாப்பாக்குறிச்சி யை சேர்ந்த ஜெயராஜ்  என்பவரை கைது செய்து திருச்சி மாவட்டஆட்சியரின்  உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் கு.பொ.வ.கு.பு.துறை சென்னை மண்டலம் பொறுப்பு திருச்சி மண்டலம்  பரிந்துரையின் பேரில் திருச்சி சரக கு.பொ.வ.கு.பு.துறை காவல்துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 03//2026, 754 03.09.2026 ன் ஆணைப்படி கள்ளச் சந்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

2026ம் ஆண்டு இதுநாள் வரை திருச்சி அலகில் 3 எதிரிகள் மீது கள்ளசந்தை தடுப்புகாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியில் 2026 ம் ஆண்டு இந்நாள் வரை 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கூறிய வழக்குகளில், இக்குற்றங்களில் ஈடுபட்ட 54 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று 02.09.2026 ம் தேதி அரியமங்கலத்தில் ரேசன் அரிசி கடத்திய குற்றம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இன்று 03.09.2026 திருச்சி கு.பொ.வ.கு.பு.துறை சரித்தரபதிவேடு குற்றவாளி பொன்மலையை சேர்ந்த அன்வர்பாட்ஷா என்பவர் 1050 கிலோ ரேசன் அரிசியை கள்ளசந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி திருச்சி மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்றியமையாப்பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.