லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் இளநிலை உதவியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

0 177
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 30  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாயகி அரசு உதவிபெறும் ஆரம்பப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து 13.11.2008ல் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வுபெற்று பணிமாறுதலில் திருச்சி மாவட்டம் திருவாணைக்கோவில் சன்னதிவீதியில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்த  நா.மாரியப்பனுக்கு ஆறாவது ஊதிய குழு பரிந்துரை அமலுக்கு வருவதற்கு முன்பு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இடைக்கால நிவாரணமான மூன்று மாத ஊதியம், அவருக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 7 1/2 மாத ஊதிய நிலுவைத்தொகை மற்றும் அவர் படித்த M.A., படிப்பிற்கான ஊக்கத்தொகையை பெற்று வழங்குவதற்கு  அதே பள்ளியில் பணிபுரிந்த  இளநிலை உதவியாளர் (கிளார்க்)  ரெங்கராஜன்  ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மாரியப்பன் லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாரின் பேரில் கடந்த 2009 இல் மாரியப்பனிடம் லஞ்சம் பெற்ற போது ரெங்கராஜனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். 

மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று இன்று திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு ,அளித்த தீர்ப்பில் T.ரெங்கராஜன், (வயது 63)   லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக ஈராண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.5,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.5,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

மேற்படி வழக்கினை  டி.எஸ்.பி. மணிகண்டன்,  ஆய்வாளர் ஞா.சக்திவேல் ஆகியோர் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்து ஒத்துழைப்பு வழங்கியும், அரசு தரப்பு வழக்கறிஞராக கோபிகண்ணன்  திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.